Home மலேசியா உணவுப் பணவீக்கத்தைக் குறைக்க மெனு ரஹ்மா பங்களித்துள்ளது என்கிறார் சலாவுதீன்

உணவுப் பணவீக்கத்தைக் குறைக்க மெனு ரஹ்மா பங்களித்துள்ளது என்கிறார் சலாவுதீன்

ஆகஸ்ட் 2021 தொடங்கப்பட்ட மெனு ரஹ்மா திட்டம் பணவீக்க விகிதத்தைக் குறைக்க வெற்றிகரமாகப் பங்களித்துள்ளது என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப் கூறினார்.

தன்னார்வ முறையில் உணவுக் கடை நடத்துனர்களால் முன்னோடி திட்டமாக இருந்த இந்த முயற்சி கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வீட்டிற்கு வெளியே விற்கப்படும் உணவின் பணவீக்கம் 9.6 விழுக்காட்டில் இருந்து 9.3 விழுக்காடாக குறைந்துள்ளதாக சலாவுதீன் தெரிவித்தார்.

இந்த முயற்சியால் பங்குபெறும் நிறுவனங்களின் விற்பனையை சராசரியாக 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார்.

இந்த மெனு ரஹ்மா முயற்சியில் பங்குபெறும் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விற்பனையை சராசரியாக 25 முதல் 30 விழுக்காடு வரையில் அதிகரித்திருப்பதும் கண்டறியப்பட்டதாக, நேற்று வங்சா மாஜுவில் KFC மற்றும் Pizza Hut உணவகங்களில் மெனு ரஹ்மா திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version