Home மலேசியா 600 ரிங்கிட் மதிப்புள்ள கைத்தொலைபேசி திருடியவருக்கு 6,000 ரிங்கிட் அபராதம்

600 ரிங்கிட் மதிப்புள்ள கைத்தொலைபேசி திருடியவருக்கு 6,000 ரிங்கிட் அபராதம்

600 ரிங்கிட் மதிப்புள்ள கைத்தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு, ஜெலேபு மாவட்ட நீதிமன்றம் இன்று 6,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

முஹமட் ஹக்கிமி ஹிக்பால் முகமட் ஷாஃபி, 21, என்ற குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி நோர்ஷஸ்வானி இஷாக் முன் வாசிக்கப்பட்டவுடன், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார்.

இவ்வழக்கில் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டின் அடிப்படையில், முஹமட் ஹக்கிமி ஹிக்பால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் கோலாக் கிளாவாங் உள்ள சிகையலங்கார நிலையத்தில் 600 ரிங்கிட் மதிப்புள்ள Honor 20 Lite பிராண்ட் மொபைல் போனை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் மீது குற்றவியல் சட்டம் 379வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகாத நிலையில், அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர், அஹ்மட் லோக்மான் ஹக்கீம் அஹ்மத் கைரி வழக்கை நடாத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version