Home மலேசியா மலேசியா வருகிறார் இந்தோனேசிய அதிபர் ஜோகோவி

மலேசியா வருகிறார் இந்தோனேசிய அதிபர் ஜோகோவி

இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோவி விடோடோ, இரண்டு நாள் பயணமாக இன்று முதல் மலேசியாவிற்கு விஜயம் செய்கிறார்.

இந்த பயணத்தின் போது, ஜோகோவி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்து இருநாட்டின் ஒத்துழைப்பின் முன்னேற்றம் மற்றும் நிலுவையில் உள்ள இருதரப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளார்.

மேலும் “பிரதமரும் ஜோகோவியும் 2025 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய ஆசியானைப் பலப்படுத்துவது உட்பட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் ஏஜென்சியின் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட பிறகு, இரு நாட்டு தலைவர்களும் பல ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்வார்கள்” என்று வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்தோனேசிய அதிபருடன் அவரது துணைவியார் இரியானா ஜோகோ விடோடோ, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இந்தோனேசிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் வருகைபுரிவார்கள்.

மேலும் இஸ்தானா நெகாராவில் மேன்மை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஜோகோவியுடன் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version