Home மலேசியா பேருந்திற்கு காத்திருக்கும் நேரத்தில் தினமும் பேருந்து தரிப்பிடத்தில் குப்பை அகற்றும் இரண்டாம் படிவ மாணவர்

பேருந்திற்கு காத்திருக்கும் நேரத்தில் தினமும் பேருந்து தரிப்பிடத்தில் குப்பை அகற்றும் இரண்டாம் படிவ மாணவர்

போர்ட்டிக்சன்: தனது பள்ளிக்கு எதிரே உள்ள பேருந்து தரிப்பிடத்தில் குப்பைகளை அப்புறப்படுத்துகிறார் 14 வயதான Y.ஜோசுவா என்ற இரண்டாம் படிவ மாணவர்.

“தினமும் சாக்கடை மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றி சிதறி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துகிறேன். பொதுப் பேருந்து வரும் வரை காத்திருக்கும் போது, எந்தச் செயலையும் செய்யாவிட்டால் எனக்கு அலுத்துபோய்விடும்” என்றார் ஜோசுவா.

“இந்தப் பகுதியைச் சுத்தமாகப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். இது பொதுப் பகுதி என்றாலும், லுகூட், தாமான் செஜாஹ்டெராவில் உள்ள எனது வீட்டிற்குச் செல்ல, தினமும் பேருந்துக்காகக் காத்திருக்கும் இடம் இதுதான். நாம் பயன்படுத்திடும் இடத்தை நாம் சுத்தகமாக வைத்திருப்பது அவசியம். அத்தோடு இவ்வாறு செய்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, அதேநேரம் சுற்றுச் சூழலும் சுத்தமாகிறது” என்கிறார் அந்த மாணவர்.

வளரும் பயிரை முளையிலேயே தெரியும் என்ற பழமொழிக்கு ஜோசுவாவை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருக்கமுடியாது .

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version