Home Top Story பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி –...

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி – 3 ஆண்டு சிறை

தமிழ்நாடு முன்னாள் முதல்-மந்திரியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதையை டிஜிபி திரிபாதிக்கு புகார் அளித்தார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த புகாரின் அடிப்படியில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகார் தொடர்பாக ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவிபடி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version