Home Top Story ஒரே ஆண்டில் 2 முறை பிறந்தநாள் கொண்டாடும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் – காரணம் என்ன?

ஒரே ஆண்டில் 2 முறை பிறந்தநாள் கொண்டாடும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் – காரணம் என்ன?

ராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து கடந்த மே 6-ந்தேதி மன்னர் 3ஆம் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெற்ற நிலையில், அவரது 74ஆவது பிறந்தாள் விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நவம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்த மன்னர் சார்லஸ், தனது பிறந்தநாளை ஜூன் மாதம் கொண்டாடியதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது. இங்கிலாந்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் நிலவும் என்பதால், அந்த மாதங்களில் பிறந்த இங்கிலாந்து மன்னர்கள் அரண்மனைக்கு உள்ளேயே அரச குடும்பத்தினருடன் தனிப்பட்ட முறையில் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

இதன் பின்னர் கோடைக்காலமான ஜூன் மாதத்தில் 2ஆவது முறையாக தங்கள் பிறந்தநாளை நாட்டு மக்களோடு சேர்ந்து பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மன்னர் 3ஆம் சார்லஸின் பிறந்தநாள் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சார்லஸ் மன்னராக முடிசூட்டிய பின் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், பிரிட்டன் அரச வம்சத்தைச் சேர்ந்த 1,400 வீரர்கள், 400-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட அணிவகுப்போடு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மன்னர் சார்லஸ் தனது 74ஆவது பிறந்தநாளை வரும் நவம்பர் மாதம் மீண்டும் ஒருமுறை கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version