Home ஆரோக்கியம் உலகளவில் நிர்ணயிக்கப்பட்ட சராசரி வயதைவிட 8 ஆண்டுகளுக்கு முன்னரே இதய நோய்க்குள்ளாகும் மலேசியர்கள்..!! வெளியான அதிர்ச்சி...

உலகளவில் நிர்ணயிக்கப்பட்ட சராசரி வயதைவிட 8 ஆண்டுகளுக்கு முன்னரே இதய நோய்க்குள்ளாகும் மலேசியர்கள்..!! வெளியான அதிர்ச்சி தகவல்

தற்போது நாட்டில் அதிகமானோர் இதய நோய்க்கு ஆளாகி வருகின்றனர். சராசரியாக ஒருவருக்கு 58 வயதில் மாரடைப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில் தாய்லாந்தில் 63 வயதிலும் சிங்கப்பூரில் 68 வயதிலும் சராசரியாக ஒருவர் இதய நோய்க்கு ஆளாகிறார் என்று கூறப்படுகிறது.

மேலும், உலகளவில் ஒருவர் இதய நோய்க்கு ஆளாவதற்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி வயதைக் காட்டிலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே மலேசியர்கள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலைக்கு முக்கியக் காரணம், மலேசியர்கள் பலரிடையே அதிகமான கொழுப்புச் சத்து இருப்பது அடையாளம் காணப்படாமல் போவதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்து இருந்தது 24.6 விழுக்காட்டு மலேசியர்களுக்குத் தெரியவில்லை என்று இதய சிகிச்சை நிபுணர், டாக்டர் ஏலன் ஃபோங் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version