Home மலேசியா வர்த்தகத்தில் சாதித்து காட்டிய டத்தோ ஜவஹர் அலிக்கு சிறந்த மலேசிய வணிக விருது

வர்த்தகத்தில் சாதித்து காட்டிய டத்தோ ஜவஹர் அலிக்கு சிறந்த மலேசிய வணிக விருது

கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒப்புக் கொள் என்பது பழமொழி. இந்த பழமொழிக்கேற்ப வர்த்தத்தில் கொடி கட்டி பறக்கும் டத்தோ ஜவஹர் அலிக்கு (டத்தோ அலி மாஜு)  சிறந்த மலேசிய வணிக விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கிறார். பலர் அவர் அலி மாஜு குழுமத்தின் தலைவர் என்று அறிவர்.

ஜவஹர் அலி (டத்தோ அலி மாஜு) ஜூன் 9, 1965 இல்  சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்னாமில் பிறந்து  வளர்ந்தவர். தனது ஆரம்ப கல்வியை கிர் ஜுஹாரி தொடக்கப்பள்ளியில் கல்வி கற்றார். அதன்பின் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் தாத்தாவால் சபாக் பெர்னாமில் வளர்க்கப்பட்டார். சிறுவயதிலிருந்தே தாத்தாவுக்கு மளிகைக் கடையில் உதவி செய்து கொண்டே வியாபாரத்தில் ஆர்வம் காட்டினார். 1987ஆம் ஆண்டு டத்தின் ஹஜ்ஜா பரகத் ஜஹானை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 4 மகள்களும், 1 மகனும் இருக்கிறார்கள்.

1994 இல் தனது மனைவியுடன் தொழில் தொடங்குவதற்காக கோலாலம்பூருக்கு குடிபெயர்ந்து தனது  சகோதரருடன் இணைந்து வணிக அனுபவத்தைப் பெற்ற ஒரு வருடத்திற்குப் பிறகு, சொந்தமாக தொழில் தொடங்கினார்.  புத்ராஜெயாவில் தனது முதல் கிளையான ஷாமாஜுவை தொடங்கினார். அது இன்று மாபெரும் வர்த்தக சாம்ராஜியமாக உருவெடுத்துள்ளது.  மிகப்பெரிய வர்த்தகராக இருந்தாலும்  பழகுவதற்கு மிகவும் எளிமையானவர் என்று அனைவராலும் பாராட்டப்படுவர் டத்தோ ஜவஹர் அலி @ அலி மாஜு.

2020ஆம் ஆண்டு முதல் மலேசிய முஸ்லீன் உணவக சங்கத்தின் தலைவராகவும்,அல் மதரஸதுல் ஃபரீதிய்யா (தஹ்ஃபீஸ் அல் குர்ஆன்) நிறுவனருமான இருக்கும் இவர் இது வரை பல  பட்டங்களை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version