Home மலேசியா ஐந்துக்கும் குறைவான தொழிலாளிகளைக் கொண்ட முதலாளிகள் இன்று முதல் குறைந்தபட்சம் RM1,500 ஊதியம் வழங்கவேண்டும்

ஐந்துக்கும் குறைவான தொழிலாளிகளைக் கொண்ட முதலாளிகள் இன்று முதல் குறைந்தபட்சம் RM1,500 ஊதியம் வழங்கவேண்டும்

ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கு RM1,500 குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்தும் சட்டம், இன்று சனிக்கிழமை (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த அமலாக்கம் சிறு மற்றும் நடுத்தர நிறுவன (SME) துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றும் என மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (MTUC) பொதுச்செயலாளர், கமாருல் பஹாரின் மன்சோர் கூறினார்.

இந்த அமலாக்கம் ஊழியர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என்றார்.

பொருட்களின் விலை உயர்வால் வாழ்க்கைச் சுமையாக இருக்கும் தொழிலாளர்களின் அதிருப்தியை இது போக்க முடியும் என்று MTUC நம்புகிறது,” என்று அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும் ஐந்துக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் RM1,500 என்ற ஆணையை அமல்படுத்துவது கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 1, 2023 வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் அறிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version