Home இந்தியா முதல் முறையாக இந்தியாவில் நடிகைக்கு ஒரு நிமிடத்திற்கு 1கோடி சம்பளம்

முதல் முறையாக இந்தியாவில் நடிகைக்கு ஒரு நிமிடத்திற்கு 1கோடி சம்பளம்

சிங் சாப் தி கிரேட் என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தலா. தொடர்ந்து மிஸ்டர் அறிவாடா என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர், இந்தி பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். இதில் கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், ஊர்வசி தற்போது தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது ரகசிய செய்திகள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தக்ககூடியவர். நடிகை ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தலா, அவ்வப்போது தெலுங்கு படங்களில் ஐட்டம் டான்ஸும் ஆடி வருகிறார். அந்த வகையில், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஐட்டம் டான்ஸ் ஆட அவர் ஒரு நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இது தான் பேசு பொருள் ஆகி உள்ளது. தெலுங்கில் பாயபட்டி சீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்திற்காக தான் அவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளாராம்.

இப்படத்தில் 3 நிமிட ஐட்டம் சாங் ஒன்று உள்ளதாம். அந்த 3 நிமிட ஐட்டம் சாங்கிற்கு கவர்ச்சி நடனம் ஆட தான் நடிகை ஊர்வசி ரவுத்தலா ரூ.3 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஊர்வசி ரவுத்தலா உருவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கேட்ட தொகையை கொடுத்து படக்குழுவும் அவரை ஐட்டம் டான்ஸ் ஆட புக் செய்துவிட்டதாம். நடிகை ஊர்வசி ரவ்துலா தெலுங்கு படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுவது இது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாக சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த வால்டர் வீரய்யா மற்றும் அகில் நடித்திருந்த ஏஜெண்ட் ஆகிய திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இந்த படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.2 கோடி சம்பளமாக வாங்கிய ஊர்வசி ரவுத்தலா, தற்போது ராம் பொத்தினேனி படத்திற்காக ரூ.1 கோடி கூடுதலாக வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version