Home மலேசியா STPM 2022 தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும்

STPM 2022 தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும்

 Sijil Tinggi Persekolahan Malaysia (STPM) 2022 தேர்வு முடிவுகள் ஜூலை 13ஆம் தேதி வெளியிடப்படும் என்று மலேசிய தேர்வு கவுன்சில் தெரிவித்துள்ளது. பள்ளிகள் மற்றும் தனியார் தேர்வர்கள் தங்கள் முடிவுகளை stpm.mpm.edu.my/stpmK என்ற இணையதளத்தில் காலை 11.30 மணி முதல் பார்க்கலாம்.

மேலும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளில் காலை 11.30 மணி முதல் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 13 ஆம் தேதி காலை 11 மணி முதல் ஜூலை 23 ஆம் தேதி மதியம் வரை STPM (ஸ்பேஸ்) MyKad எண் (ஸ்பேஸ்) ரோல் எண்ணை 15888 க்கு டைப் செய்து SMS மூலம் முடிவுகளைச் சரிபார்க்கலாம். நாடு முழுவதும் 659 தேர்வு மையங்களில் மொத்தம் 41,701 பேர் எஸ்டிபிஎம் 2022 தேர்வெழுதினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version