Home Top Story அமெரிக்காவில் மின்னல் தாக்கி கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவி

அமெரிக்காவில் மின்னல் தாக்கி கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவி

வாஷிங்டன்:

இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா. இவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவர் இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் ஜான்ஜசிண்டோ நினைவு இடத்தை பார்வையிட சென்றார். அப்போது அவரை திடீரென மின்னல் தாக்கியது. இதனால் அவர் அருகில் உள்ள குளத்தில் விழுந்தார்.

இதை பார்த்தவர்கள் சுஸ்ருன்னியாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மின்னல் தாக்கியதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மூளை பாதிக்கப்பட்டது. இதில் அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி கோமாவில் இருக்கும் தகவல் கிடைத்து இந்தியாவில் இருக்கும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version