Home மலேசியா தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் RM240,000 EPF சேமிப்பு வைத்திருக்க வேண்டும் என்கிறார் அஹ்மட் மஸ்லான்

தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது குறைந்தபட்சம் RM240,000 EPF சேமிப்பு வைத்திருக்க வேண்டும் என்கிறார் அஹ்மட் மஸ்லான்

நாட்டில் உள்ள தொழிலாளர்கள் 55 வயதை அடையும் போது குறைந்தபட்சம் RM240,000 ரிங்கிட் சேமிப்பை தமது ஊழியர் வருங்கால சேமிப்பு நிதியை (EPF) சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அஹமட் மஸ்லான் தெரிவித்தார்.

அதாவது மாதத்திற்கு RM1,000 என்ற வகையில், 20 ஆண்டுகளுக்கு ஒருவர் தனது கணக்கில் சேமித்தால் அவர் குறைந்தபட்சம் 240,000 ரிங்கிட்டை ஓய்வுபெறும்போது, அவர் தனக்கான ஓய்வூதிய நிதியாக வைத்திருக்க முடியும் என்று அவர் கூறினார்.

“அதாவது மலேசியர்களின் ஆயுட்காலம் 75 ஆக இருக்கும் நிலையில், அவர்கள் ஓய்வு பெறும்போது போதுமான சேமிப்பைக் கொண்டிருப்பது முக்கியமாகும் ” என்று, அவர் கிளாந்தானிலுள்ள EPF தலைமையகத்திற்குச் சென்ற பிறகு கூறினார்.

i-Saraan திட்டத்தின் மூலம் தன்னார்வ பங்களிப்புகளை வழங்குவதன் மூலம் தொழிலாளர்களின் EPF சேமிப்பை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது என்று அஹ்மட் மஸ்லான் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version