Home Top Story உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வாழைக்காய்

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வாழைக்காய்

உலக அளவில் அனைவராலும் ரசித்து ருசித்து சாப்பிடப்படும் விலை மலிவான ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்தை போல வாழைக்காயும் பலருக்கு விருப்பமான ஒன்று. வாழைக்காய் வறுவல், வாழைக்காய் மசியல், வாழைக்காய் பஜ்ஜி, வாழைக்காய் பொடிமாஸ் போன்ற பல்வேறு பதார்த்தங்கள்  வாழைக்காய் வைத்து செய்யப்படுகிறது. இது ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த பதிவில் வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஒரு சில நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

செரிமானத்தை ஊக்குவிக்கிறது : வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும் என்பது பலருக்கும் தெரியும். அதே போல வாழைக்காயையும் மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சிறந்த பலன் தருகிறது. வாழைக்காயில் செரிமானத்தை ஊக்குவிக்க கூடிய பொருட்கள் காணப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் இதய நோய்க்கு எதிராக செயல்படும் பண்புகளும் இருக்கிறது. வாழைக்காயில் காணப்படும் முன் உயிரியல் (பிரீ பையாடிக்) விளைவு குடலில் இருக்கக்கூடிய நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் பல வாழைக்காயில் காணப்படுகிறது. வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்குகளை போல வாழைக்காயிலும் ஏராளமான பொட்டாசியம் சத்து உள்ளது. இந்த பொட்டாசியம் சத்தானது இயற்கை வாசோடைலேட்டராக செயல்பட்டு தசைகளின் சுருக்கத்திற்கும், இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கும் உதவி புரிகிறது. வாழைக்காயில் பொதிந்துள்ள மாவுச்சத்து ஆரோக்கியமான சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version