Home மலேசியா மக்களின் தேவைக்கு ஏற்ப வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வரும் ஏசான் சொத்து நிறுவனம்.

மக்களின் தேவைக்கு ஏற்ப வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வரும் ஏசான் சொத்து நிறுவனம்.

ஜோகூர்பாரு, ஆக. 2-

ஏசான் சொத்து நிறுவனம்  தனது நற்பெயரை வேகமாக வளர்த்து வருகிறது. விலையை குறைக்கும் புதுமையான கட்டிடக்கலையில் பிரீமியம் சொத்துக்களை வழங்குதலிலும் நிறுவனங்கள் முதலீடு செய்வதையும் ஆதரித்து வருகிறது.

(Left) Shareholder of IPG,Jonathan Loh Bing Cong, Managing Director of Gplex Realty, Jimmy Chao Miew San, MCentury Properties Head of Southern Region, Dato Katherine Ho, Pengasas Kumpulan Ehsan dan Pengasas Ehsan Property, Dato Haji Abdul Hamid Bin P.V ABDU (D.I.M.P), Pengurus Besar Kumpulan Ehsan , En Abdul Gafur Bin Suleiman,  Pengasas First Global Realty Sdn Bhd, Ms Sophia Chong, Pengurus Projek Kanan First Global Realty Sdn Bhd, Hoo Chang Kang and Renzo Realty, Dato’ Ivan Cheng attended the launch of the show unit of Mutiara Austin Residence at Mount Austin Johor Bahru.

இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு முத்தியாரா ஆஸ்டின் வீடமைப்புத் திட்டத்தை இது கொண்டு வந்தது. லிந்தாங் ஹெபாட் நிறுவனம் ஜோகூர், மவுண்ட் ஆஸ்ட்னில் இந்த வீடமைப்புத் திட்டத்தை மேற்கொண்டது. முத்தியாரா ஆஸ்டின் கருத்துப்படி  இந்த வீடமைப்புத் திட்டங்களில் பல தனித்துவமான குணங்களுடன் சிறப்பு விற்பனை திட்டங்களையும்  கொண்டுள்ளதாக இந்நிறுவனத்தின் நிறுவனர்  டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் பின் பி.வி அப்டு கூறினார்.

Dato Haji Abdul Hamid Bin P.V ABDU (D.I.M.P), Founder, Ehsan Group of Companies & CEO of Ehsan Property

இத்திட்டம் மலேசிய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட  கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் (KL&SG HSR) திட்டத்தின் அருகாமையில் உள்ளது முக்கிய அம்சமாக விளங்கி வருகிறது.

இதனைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பு, வரவிருக்கும் கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தின் அருகாமையில் உள்ளதால் இப்பகுதியில் புதிய சொத்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், ரியல் எஸ்டேட் சந்தை இப்போது மேலும் திடமாக உள்ளதாக டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் கூறினார்.

மவுண்ட் ஆஸ்டின் அருகாமையில் உள்ள சேவைகள், வசதிகளுடன் நன்கு வளர்ச்சி கண்ட ஒரு பகுதி என்றும் அவர் கூறினார். Ikea, Lotus, Toppen, மருத்துவமனைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட மேலும் பல இடங்களின் அருகில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

எங்கள் திட்டத்திற்கு மவுண்ட் ஆஸ்டினைத் தேர்ந்தெடுத்தோம், காரணம் அங்கு ஏராளமான வசதிகள் உள்ளன.

Mutiara Austin Residence is expected to be completed by the end of 2026

ஜோகூர் பாரு நகரம் உட்பட  அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு  அருகில் உள்ளது. அதுமட்டுமின்றி, மவுண்ட் ஆஸ்டின் திட்டம் மக்களுக்கு நன்கு அறிமுகமானதாகும், அது அப்பகுதியில் நல்ல மதிப்பையும் கொண்டுள்ளது.

நாங்கள் அப்பகுதியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டபோது  மலிவு விலை வீடுகளுக்கு அதிகமான தேவைகள் உள்ளது என்பதும் தெரிய வந்தது.

எனவே, மவுண்ட் ஆஸ்டினில் எங்கள் வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்தோம். இது உங்கள் தேவைகளுக்காக நாங்கள் இதனை உருவாக்குகிறோம் என்ற ஏசான் சொத்து நிறுவனத்தின் தூரநோக்குத் திட்டத்திற்கு  ஏதுவாக அமைந்துள்ளது.  இந்நிறுவனத்தின் கொள்கை அடிப்படையில்  சொத்துக்கள் நிறுவப்படுகின்றன என்ற அவர், பரிவர்த்தனைகள், சீரான முயற்சிகள், உடல் வலிமையைக் காட்டிலும் திறமையான முறையில் இதனை செயல்படுத்துவதே ஆகும்.

இத்திட்டத்தின் பெயரான முத்தியாரா ஆஸ்டின் வீடமைப்புத் திட்டம் பரந்த அளவில் ஒரு வீடமைப்புத் திட்டத்தை அமைப்பதாகும். அதன் அழகு, முக்கியத்துவம் காரணமாக, இந்த வீடமைப்புத் திட்டம் பயனீட்டாளர்களை ஈர்த்துள்ளது. முத்தியாரா ஆஸ்டின் குடியிருப்பு மூன்று சேவை அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.

650 வீடுகளைக் கொண்ட லிந்தாங் ஹெபாட் நிறுவனத்தின் அடுக்குமாடி வீடமைப்புத் திட்டமாகும்.  இது ஆஸ்டின் மலைப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இங்கிருந்து  ஏயோன் டெப்ராவ், இக்கியா தெப்ராவ், சாசாரலான் டோம் ஆகிய பகுதிகளுக்கு  5 நிமிடங்களில் ஙெ்ன்று விடலாம்.

டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட்டின் கருத்துப்படி, முத்தியாரா ஆஸ்டின் குடியிருப்புக்கான இலக்கில்  புதுமணத் தம்பதிகள், இளம் தொழில் வல்லுநர்கள், முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் ஆகியோர் அடங்குவர். இப்போது அங்கு அதிகமான மக்கள் வீடுகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் சொன்னார்.

ஏ பிரிவில் 743 சதுர அடி (2+1 அறைகள், 2 குளியலறைகள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. பி பிரிவில் 862 சதுர அடி (3 அறைகள், 2 குளியலறைகள்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் பல வகையான வீடுகளும் அதிகமாக உள்ளன. காரணம்  அவை மிகப் பெரியவை அல்லாமல்,  சிறிய குடும்பங்கள், முதல் முறையாக வீடு வாங்குபவர்களும் அடங்கும். பூமிபுத்ராக்களுக்கு சிறப்பு கட்டணக்   கழிவையும் வழங்கி வருகிறோம். பகுதியளவு பொருத்தப்பட்ட வீடுகளையும் நாங்கள் வழங்குகிறோம் என்றார். இதனைத் தவிர்த்து, முத்தியாரா  ஆஸ்டின் வீடமைப்புத் திட்டம் ஒரு பச்சை வடிவமைப்பு தத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மூலிகைத் தோட்டத்திலுள்ள வசதிகள் மிகவும் தெளிவாகத் தெரிகிறது.  அதன் தரைப்பகுதிகளும் நிறைய பசுமையால் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் சொன்னார்.

முத்தியாரா ஆஸ்டின் வீடமைப்புத் திட்டம் வரும் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட விற்பனை 88 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தொடங்கப்படும் என டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் கூறினார்.

ஒட்டுமொத்தமாக, 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் எங்களின் வீடமைப்புத் திட்டம் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிடும் என்று நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். இந்த வீடமைப்புத் திட்டம்  ஆஸ்டின் மலைப் பகுதியில் அருகில் அமைந்துள்ளதால் அது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிறுவனம் தரமான மலிவு விலை வீடுகளை உருவாக்க உத்தேசித்துள்ளது. எதிர்காலத்தில் உயர்தர சொத்து திட்டங்களை நாடு  முழுவதும் விரிவாக்கம் செய்யவும் இந்நிறுவனம் விருப்பம் கொண்டுள்ளதாக டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் கூறினார்.

இவ்வாண்டு அதன் அனைத்து திட்டங்களிலும் 4,000 வீடுகளுக்கு மேலான வீடுகளைக் கட்டி முடித்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் தொடங்க திட்டமிட்டுள்ள திட்டங்கள் துரித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தெற்கு வட்டாரம், தென் பகுதி உட்பட 2 பில்லியன் மதிப்புள்ள வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தவும் நாங்கள் திட்டம் கொண்டுள்ளோம் என்றார்.

அதுமட்டுமின்றி, இந்நிறுவனம் மேலும் உயர்தர வீடமைப்புத் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும்  டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் கூறினார்.

சொத்துடைமை திட்டங்கள் உட்பட எதிர்காலத்தில் இன்னும் அதிகமான மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளவும் நாங்கள் திட்டம் கொண்டுள்ளோம். தற்போது, ஏசான் சொத்து நிறுவனம் மொத்தம் 3,442 வீடமைப்புத் திட்டங்களை உருவாக்க மதிப்பிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், அதன் மொத்த வளர்ச்சி திட்டத்தின் மதிப்பு  1.307 பில்லியன் ரிங்கிட் ஆகும்.

எஹ்சான் ஆலை, சொத்து நிறுவனம் பற்றி விளக்கமளித்த அவர்,  Ehsan Plant  Property Sdn Bhd கடந்த 15.5.2008 ஆம் தேதி நிறுவனப் பதிவில் 817795X என பதிவு செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்திற்கு டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் பின் பி.வி. அப்து (D.I.M. P.) தலைமையேற்ற வேளையில்,  இந்த நிறுவனத்தை மேலும் கௌரவப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதாகவும் உறுதியளித்தார்.  நிறுவனம் எந்த ரூபத்தில் இருந்தாலும், அதனுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் திறந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர்,  அதன் வாணிபத் திறனை அதிகரிக்க இதில் அரசாங்க, தனியார் துறை ஆகியவையும் அடங்கும் என்றார்.

கடந்த 1992ஆம் ஆண்டில், டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் பின் பி.வி. அப்து ரியல் எஸ்டேட் துறையில் இறங்கத் தொடங்கினார். ஏசான் சொத்து நிறுவனம் மலேசியாவில் மிகப்பெரிய ஏல நிறுவனமாக  நிறுவுவதிலும் அது வெற்றி பெற்றது.

ஏசான் ஏலதாரர் நிறுவனம் மலேசியாவில் உள்ள அனைத்து வங்கிகளுடனும்  கூட்டு சேர்ந்து 100,000 ரிங்கிட்டிற்கும்  அதிகமான சொத்துக்களை வெற்றிகரமாக ஏலம் எடுத்துள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டில் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் பின் பி.வி. அப்து ஒரு வீடமைப்பு மேம்பாட்டாளராக  அந்நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்தினார்.

இந்நிறுவனம் இதுவரை சிலாங்கூரில் ஏசான் ரெசிடென்ஸ் சிப்பாங், நெகிரி ஙெ்ம்பிலான், தம்பினில் தாமான் சலாம் நடியா, நெகிரி செம்பிலான், தாமான் பிங்கிரான் மார்கிசா லாபு, ஜோகூர், குளுவாங் தாமான் ஸ்ரீ ஏசான்,  அலோர் கஜா, டிமென்சி அபார்ட்மெண்ட், நெகிரி செம்பிலான், தம்பினிலுள்ள தாமான் சாலாம் நடியாவில்  இரண்டு மாடி கடை, சிலாங்கூரின் சிப்பாங்கில் இரண்டு  மாடி கடைகளையும் கட்டியுள்ளது.

இந்நிறுவனத்தின் தற்போதைய திட்டங்கள் ஜோகூர்பாருவில் ரெசிடென்சி முத்தியாரா ஆஸ்டின், நெகிரி ஙெ்ம்பிலான், ரெம்பாவில்  தாமான் மாவார் ஏங்ான், கெடா, சுங்கைப் பட்டாணியில் தாமான் யுனிவர்சிட்டி பெஸ்தாரி,

தமான் யுனிவர்சிட்டி பெஸ்டாரி உட்பட நெகிரி ஙெ்ம்பிலான், ஏசான் விடூரி பண்டார் பாரு நீலாய், பேராக், கம்பாரில் தாமான் ஸ்ரீ ஏமாசில் மேற்கொள்ளப்படும் குழாய்கள் அமைக்கும் திட்டங்களும் உள்ளடங்கும் என்றார்.

இந்நிறுவனம் பல ஆண்டுகளாக அதன் பங்களிப்புக்காக பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது. அது பெற்ற விருதுகள்:

  1. 2014ஆம் ஆண்டில் குளோபல் லீடர்ஷிப் விருது
  2. 2014ஆம் ஆண்டில் சிலாங்கூர் எக்ஸலென்ஸ் பிசினஸ் விருது
  3. 2015ஆம் ஆண்டில் ஆசியான் சிறந்த வாணிப விருது
  4. 2015ஆம் ஆண்டில் பி.கே.எஸ். அங்கீகார விருது
  5. 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில் பி.கே.எஸ். மிம்கோயின், கோல்டன் தினார் விருதுகள்
  6. 2017ஆம் ஆண்டு மலேசியாவின் சிறந்த சாதனையாளர் விருது
  7. 2018ஆம் ஆண்டு குளோபல் லீடர்ஷிப் விருது
  8. 2022ஆம் ஆண்டில் பூமிபுத்ரா பிசினஸ் எக்ஸலன்ஸ் விருது

 

 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version