Home மலேசியா போதைப்பொருள் விற்பனை -மாணவர் உட்பட இருவர் கைது

போதைப்பொருள் விற்பனை -மாணவர் உட்பட இருவர் கைது

கோத்தா பாரு, அகஸ்ட்டு 6:

தும்பாட், பாசீர் பெக்கான், தாமான் ஸ்ரீ கோத்தாவில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் படிவம் 5 மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஜூலை 31 அன்று போலீசார் நடத்திய சோதனையில், சந்தேக நபர் மாட்டியிருந்த பை மற்றும் கால்சட்டை பாக்கெட்டில் 11,660 ரிங்கிட் மதிப்புள்ள 1,060 குதிரை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

26 மற்றும் 17 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்து, வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக கிளாந்தான் மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ முகமட் ஜாக்கி ஹருன் தெரிவித்தார்.

“26 வயதான சந்தேக நபர் வேலையில்லாதவர் என்றும் அவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான 3 குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ளார் என்றும், அதே நேரத்தில் சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் இருவரும் போதைப்பொருளுக்கு எதிர்மறையாக இருப்பதைக் கண்டறிந்தனர்,” என்று அவர் இன்று, நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரணைக்கு உதவ இரண்டு சந்தேக நபர்களும் நாளை வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று முகமட் ஜாக்கி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version