Home மலேசியா மாநில தேர்தல் வாக்கெடுப்பு: தோக் மாட், அமினுதீன் காலையிலேயே வாக்களித்தனர்

மாநில தேர்தல் வாக்கெடுப்பு: தோக் மாட், அமினுதீன் காலையிலேயே வாக்களித்தனர்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்டு 12 :

இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) 6 மாநில தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகி பரபரப்பாக நடந்த்து வருகின்றது. இதில் ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சியில் ஒன்றான அம்னோவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன், காலையிலேயே தனது வாக்களிப்பு கடமையை நிறைவேற்றினார்.

வாக்களிப்பிற்காக அவர் தனது மனைவியுடன் நெகிரி செம்பிலானில் உள்ள ரந்தாவ்வில் உள்ள SKJC சுங் ஹுவாவிற்கு காலை 8.30 மணியளவில் வாக்களிக்க வந்தார்.

இரு தரப்பிலிருந்தும் இது ஒரு சுத்தமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட்து என்றும், பிரச்சார காலத்தில் ரந்தாவ்வில் காணப்பட்ட முதிர்ந்த அரசியலைக் கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் ரெம்பாவ் எம்.பி.யுமான முகமட் ஹசன் கூறினார்.

மேலும், பிற்பகலில் நிலவும் நிச்சயமற்ற வானிலை காரணமாக வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்க வெளியே வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

PAS கட்சியை சேர்ந்த ரோஸ்மல் மலகானுக்கு எதிராக முஹமட் தனது ரந்தாவ் இடத்தைப் தக்கவைத்துக்கொள்வர் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த நெகிரிசெம்பிலான் பராமரிப்பு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன், இன்று காலை 8.34 மணிக்கு சிகாமாட்டில் உள்ள SMK டத்தோ ஹெச்ஜே முகமட் ரெட்ஸாவுக்கு வந்து தனது கடமையை நிறைவேற்றினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version