Home Top Story நிலவின் தென்துருவம்: முதலில் தரையிறங்குவது சந்திரயான்? or லூனா 25? உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்

நிலவின் தென்துருவம்: முதலில் தரையிறங்குவது சந்திரயான்? or லூனா 25? உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்

மாஸ்கோ: நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் வகையில், ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் கடந்த 11 ஆம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 5 நாட்களில் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு சென்றது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ரூ.615 கோடியில் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ஆம் தேதி மதியம் 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் – 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நிலவை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக சந்திரயான் -3 விண்கலம் கடந்து கொண்டு இருக்கிறது. தற்போது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3, வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்க உள்ளது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்தது இல்லை.

இந்த நிலையில் தான், ரஷ்யாவும் நிலவை ஆய்வு செய்ய லூனா -25 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்த நிலையில், இன்று லுனா விண்கலத்தை ரஷ்யா விண்ணில் ஏவியது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.10 மணியளவில் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா, நிலவில் மீண்டும் ஆய்வு செய்வதற்காக விண்கலத்தை ஏவியுள்ளது.

இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை ஐந்தே நாளில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு 4 முதல் ஐந்து நாட்கள் நிலவின் பாதையில் சுற்றும் இந்த விண்கலம் தென் துருவத்தில் தரையிறங்குவதற்கான சரியான இடத்தை ஆய்வு செய்து அதன்பிறகு தரையிறங்க உள்ளது. இந்த விண்கலம் நேற்று நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றது.

வரும் 21 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் இந்த விண்கலத்தை தரையிறக்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். சந்திரயான் விண்கலம் வரும் 23 ஆம் தேதி நிலவின் சாப்ட் லேண்டிங் முறையில் தென் துருவத்தில் தரையிறங்குகிறது. இந்த நிலையில், தான் இரண்டு நாட்களுக்கு முன்பே ரஷ்யா தனது விண்கலத்தை தரையிறக்க உள்ளது.

நிலவின் ஆராய்ச்சியில் சந்திரயான் 3 க்கு முன்னதாக ரஷ்யா தனது விண்கலத்தை தரையிறக்க திட்டமிட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற தொடங்கியிருக்கிறது. கடந்த 11 ஆம் தேதி ரஷ்யா, நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இந்த லுனா 25 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது கவனிக்கத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version