Home மலேசியா speed-cam op; ஒரே நாளில் 8,718 பேருக்கு சம்மன்

speed-cam op; ஒரே நாளில் 8,718 பேருக்கு சம்மன்

கோலாலம்பூர்: நேற்று தொடங்கிய speed camera operation  பிடிபட்ட சாலைப் பயணிகளுக்கு 8,718 சம்மன்களை போலீசார் வழங்கினர். புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் நஸ்ரி ஓமர் கூறுகையில், வாகன ஓட்டிகளுக்கு அதிகபட்சமாக 8,352 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.

வணிக மற்றும் சேவை வாகனங்களுக்கு மொத்தம் 322 சம்மன்களும், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு 44 சம்மன்களும் வழங்கப்பட்டுள்ளன. வேக வரம்பிற்கு மேல் வேகமாக செல்வதற்கான K170A சம்மன் அறிவிப்பு, ஓட்டுநர் உரிமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள முகவரிக்கு வாகன உரிமையாளருக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பப்படும்.

வேகமாக வாகனம் ஓட்டுவதற்கான அனைத்து சம்மன்களும் நாட்டில் உள்ள எந்த மாவட்ட போக்குவரத்து போலீஸ் அலுவலகத்திலும் செலுத்தலாம் என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார். நாட்டில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க அனைத்து சாலை பயனாளிகளும் நினைவூட்டும் வகையில் வேக கேமராக்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நஸ்ரி கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட சாலை வேக வரம்பிற்கு மேல் வாகனம் ஓட்டுவது இந்த நாட்டில் சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் கட்டுப்பாட்டை இழக்க வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version