Home Top Story கூலாய் மாணவர்கள் கின்னஸ் சாதனை

கூலாய் மாணவர்கள் கின்னஸ் சாதனை

மலேசியாவில் உள்ள ஆறு மாணவர்களுக்கு கின்னஸ் சாதனை கனவு நனவானது . இந்த இந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கூலாயில் உள்ள EWRF அலுவலகத்தில்  நடைபெற்ற விழாவில் கனகேஸ்வரி முருகன்  (வயது 15) ரட்ஜியதுல் சியாஃபினாஸ் அப்துல்லா(வயது 14,) பிரியங்கா முருகன்(17,) கன் சிவ் ஈ (22,)சாந்திய சந்திரன்(21,) மற்றும் திவேனேஷ்வரன் முருகன், (வயது 20) ஆகியோர் மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றனர்.

அவர்களில் இருவர் திவனேஷ்வரன் மற்றும் கன் ஆகியோர் 72 மணிநேரம் நிகழ்த்தப் பட்ட பண்டை தமிழ் தற்காப்புக் கலையான சிலம்பம் ‘போர் கலை’ இன் இடை விடாத ஆட்டத்தில் நீண்ட நேர சாதனையை தமதாக்கினர்.

சிலம்பம் மற்றும் பரதம் ஆகிய இரண்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு இரண்டு நிகழ்வுகளுக்கும் விருதுகளை பெற்றவர் கான் மட்டுமே. மற்ற நால்வரும் ஆன்லை னில் நடனமாடி பரதத்தில் அற்புதமான சாதனை படைத்தனர்.

அவர்கள் அனைவருக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணிகளாக இருந்தன. மாணவர்கள் ஓய்வின்றி தூக்கமின்றி தினமும் பயிற்சி செய்தனர்.

கல்வி நல ஆராய்ச்சி அறக்கட்டளை (EWRF) ஜோகூர் பாரு ஆறு மாணவர் சாதனைக ளுக்கு பங்களித்தது. கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த மாணவர்களுக்கான பரதம் மற்றும் சிலம்பம் பயிற்சிக்கான செலவை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் நிதி யுதவி செய்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version