Home மலேசியா பாண்டா குட்டிகளான Yi Yi மற்றும் Sheng Yi சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன

பாண்டா குட்டிகளான Yi Yi மற்றும் Sheng Yi சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன

கோலாலம்பூர்:

ள்நாட்டு மிருகக்காட்சி சாலையில் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட இராட்சத பாண்டா குட்டிகளான Yi Yi மற்றும் Sheng Yi ஆகிய இரண்டும் சீனாவுக்குத் திரும்பிஅனுப்பப்படவுள்ளதாக டத்தோஸ்ரீ ஹுவாங் தியோங் சிய் தெரிவித்துள்ளார்.

“இந்த ராட்சத பாண்டா குட்டிகள் ஏனைய பாண்டாக்களுடன் பழகவும், இனப்பெருக்கம் செய்யவும் ஏதுவாக அவை சீனாவிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன் ” என்று இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான துணை அமைச்சருமான அவர் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இப்பாண்டாக்குட்டிகளின் தாய், தந்தை பாண்டாக்களை மலேசியா 10 ஆண்டுகளுக்கு கடனாகப் பெற்றது.

ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்த ஜோடி பாண்டாக்கள் ஈனும் குட்டிகளை சீனாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

“இப்போது 5 வயதாக இருக்கும் Yi Yi , முதலில் 2020 இல் வீட்டிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக திருப்பி அனுப்பப்படுவதை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version