Home மலேசியா தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மெர்டேக்கா கொண்டாட்டங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் புத்ராஜெயாவில் குவிந்துள்ளனர்

தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் மெர்டேக்கா கொண்டாட்டங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் புத்ராஜெயாவில் குவிந்துள்ளனர்

புத்ராஜெயா:

லேசியா தனது 66வது சுதந்திரத்தை இன்று கொண்டாடும் வேளையில், மலேசியாவின் கூட்டாட்சி அரசாங்கத்த்தின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் தேசபக்தியின் வலுவான உணர்வு வெளிப்பட்டது.

புத்ராஜெயாவிற்கு செல்லும் பல சாலைகள் தேசிய அணிவகுப்புக்கு தயாராகும் வகையில் விடியற்காலையில் சில மணிநேரங்களுக்கு முன்பு மூடப்பட்டதால், லெபுஹ் செத்தியா வழியாக போக்குவரத்து நெரிசலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நெரிசல் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தங்களின், காலை 5 மணிக்கே பிரதான ஊர்வலப் பகுதியை வந்தடைந்துவிட்டிருந்தனர்.

நகரின் பொது போக்குவரத்து அமைப்புக்களில் பாதுகாப்புப்படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்ததைக் காணமுடிந்தது.

சாலை நெடுங்கிலும் கவச டிரக்குகள், ஹம்வீகள் மற்றும் டாங்கிகள் வரிசையாக நின்றதைப் பார்க்கும்போது, மலேசியாவின் வலிமைக்கு இந்த நகரம் ஒரு சான்றாக இருந்தது.

மாட்சி மை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா காலை 8 மணிக்கு முன்னதாகவே அரங்கிற்குள் பிரவேசித்தபோது, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தார், அவர்களைக் கண்ட மக்கள் கூட்டம் ஆரவாரம் செய்தது.

தேசிய கீதமான நெகராக்கூ இசைக்கப்பட்டதுடன் சுதந்திர தின நிகழ்வு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

 

இந்த ஆண்டு கொண்டாட்டங்கள், “Malaysia Madani: Tekad Perpaduan Penuhi Harapan”  என்ற கருப்பொருளில், ஒற்றுமையான, இணக்கமான மற்றும் செழிப்பான தேசத்திற்கான அனைத்து வகை மலேசியர்களின் இதயப்பூர்வமான வாழ்த்துக்களுடன், ஆடல், பாடல், அணிவகுப்பென சுதந்திரதினம் களைகட்டியுள்ளது.

இந்த வருடம் நான்காவது முறையாக புத்ராஜெயா சுதந்திர தினத்தை ஏற்று நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version