Home Top Story நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா: கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா: கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவில் கந்தகம் உள்ளிட்டவை இருப்பதை நேற்று முன்தினம் கண்டறிந்து அனுப்பியதுடன் நேற்று விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியது.

இப்படி தொடர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வை மேற்கொண்டு வரும் சந்திரயான் 3 விண்கலம் இன்று பிளாஸ்மா இருப்பதையும் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ கூறுகையில், “நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளது. பிளாஸ்மா சூழலை முதன் முதலில்  லேண்டர் அளவீடு  செய்துள்ளது. லேண்டரில் உள்ள நிலவு உயர் உணர்திறன் அயனோஸ்பியர் மற்றும் வளிமண்டலத்தின் ரேடியோ அனாடமி -லாங்முயர் ஆய்வில் தகவல் தெரியவந்தது” என தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version