Home உலகம் இடைத்தேர்தல்: CIQ இல் உள்ள அனைத்து முகப்பிடங்களும் வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படும் – JIM

இடைத்தேர்தல்: CIQ இல் உள்ள அனைத்து முகப்பிடங்களும் வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படும் – JIM

ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் பணிபுரியும் மற்றும் தங்கியிருக்கும் வாக்காளர்கள் திரும்பி வருவதற்கு வசதியாக, ஜோகூரில் உள்ள நாட்டின் இரண்டு நுழைவுப் புள்ளிகளில் உள்ள அனைத்து குடிநுழைவு முகப்பிடங்களும் இந்த வெள்ளிக்கிழமை முதல் செயல்படும். இதன் மூலம் அவர்கள் சனிக்கிழமை நடைபெறும் பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில இடைத்தேர்தலில் வாக்களிக்க முடியும்.

இந்த வாக்காளர்கள் சுமூகமாக திரும்புவதை துறை உறுதி செய்யும் என்று ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் பஹாருடின் தாஹிர் கூறினார். இருப்பினும்,சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வளாகம் (CIQ) மற்றும் இஸ்கந்தர் புத்ரியில் உள்ள சுல்தான் அபுபக்கர் வளாகம் ஆகியவற்றில் இந்த வாக்காளர்களுக்கு மட்டும் என சிறப்பு பாதைகள் எதுவும் திறக்கப்படாது என்றார்.

CIQ இல் 236 குடிவரவு நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகள் இருக்கும் – மோட்டார் சைக்கிள்களுக்கு 100, கார்களுக்கு 60, பேருந்துகளுக்கு 36, மற்றும் 40 தானியங்கி முகப்பிடங்கள் என்ற முறையில் இயங்கும். இஸ்கந்தர் புத்ரியில், 162 முகப்பிடங்கள், மோட்டார் சைக்கிள்களுக்கு 50, கார்களுக்கு 48, பஸ்களுக்கு 52, தானியங்கி முகப்பிடங்கள் 12 என அமைக்கப்படும். இரண்டு வெளியேறும் இடங்களிலும் கிட்டத்தட்ட 2,000 குடிநுழைவு பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version