Home மலேசியா முன்னாள் துணை அமைச்சர் அப்துல்லா ஃபட்சில் சே வான் காலமானார்

முன்னாள் துணை அமைச்சர் அப்துல்லா ஃபட்சில் சே வான் காலமானார்

பெட்டாலிங் ஜெயா:

முன்னாள் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அப்துல்லா ஃபட்சில் சே வான் தனது 78வது வயதில் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 6) காலை காலமானார்.

பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களில் இலாகாக்களை நிர்வகித்த அப்துல்லா, கோலாலம்பூரில் உள்ள KPJ தவக்கல் மருத்துவமனையில் காலமானதாக கூறப்படுகிறது.

முன்னாள் மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் (BAM) தலைவராக இருந்த அப்துல்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள BAM, அவரது பங்களிப்புகள் எப்போதும் பாராட்டப்படும் என்று தெரிவித்துள்ளது .

மறைந்த அப்துல்லா 1993 முதல் 2000 வரை ஏழு ஆண்டுகள் தேசிய பேட்மிண்டன் நிர்வாகக் குழுவை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version