Home Top Story சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

சனாதன தர்மம் என்றால் என்ன? அது சர்ச்சையாக்கப்பட்டது ஏன் ?

சனாதன தர்மம் பற்றி பேச்சு தான் கடந்த இரண்டு நாட்களாக அரசியல் ரீதியான விவாதத்திற்குரிய முக்கிய விஷயமாக மாறி உள்ளது. இதனால் சனாதன தர்மம் என்றால் என்ன, அதற்கு என்ன அர்த்தம், சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றா, அது மதம் சார்ந்த விஷயமா என்பது தான் அனைவரின் மனதிலும் எழுந்துள்ள சந்தேகமும், குழப்பமுமாக உள்ளது.

சனாதன தர்மம் என்பது பற்றி வரலாற்று ஆய்வாளர்களும், ஆன்மீக ஆன்றோர்களும் பல விதமான விளக்கங்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் சனாதன தர்மம் என்றால் என்ன என்பது பற்றி முதலில் தெரிந்து கொண்டால் தான், அது எதற்காக, எந்த வகையில் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறி உள்ளது என்பது பற்றி தெரிந்த கொள்ள முடியும்.
சனாதன தர்மம் என்றால் என்ன ?

சனாதன எதிர்ப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு சமாதன தர்மம் என்றால் என்பது பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

சனாதன தர்மம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இந்த சொல்லிற்கு நிலையான தத்துவஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என பல விதமான பொருள்கள் சொல்லப்படுகிறது. பொதுவாக தர்மம் என்பது, சனாதன தர்மம், வர்னாசராம தர்மம் என இரண்டு வகையாக சொல்லப்படுகிறது. இவற்றில் சனாதன தர்மம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஒரு ஆன்மிக அடையாளமாகும்.

அதே சமயம், வர்னாசராம தர்மம் என்பது காலம், ஒருவரின் வாழ்க்கை சூழல் ஆகியவற்றை பொறுத்து வகுக்கப்படும் கடமையாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், தொன்மையானது, நிலையான நெறிமுறைகளைக் கொண்டது என்பதே சனாதன தர்மமாகும்.சனாதனம் என்ற சொல் மகாபாரதத்தில் பல இடங்களிலும், திருக்குறளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்மிக ஆன்றோர்கள் கூறுகையில், சனாதன தர்மம் என்பது பழமையான பண்பாடு. பெற்றோர்களை எப்படி மதித்து நடத்த வேண்டும், இறைவனை எவ்வாறு மதிக்க வேண்டும், அனைவரிடமும் அன்புடன் இருக்க வேண்டும் என போதிக்கும் முறையாகும். சாதி, மதம் என்பதெல்லாம் பிற்காலத்தில் தோன்றியவை. ஆனால் இது வாழ்வியல் நெறிமுறைகளை சொல்வதாகும் என்கின்றனர்.

சனாதன தர்மம் என்பது சமன்யதர்மம், வர்னதர்மம், ஆஷ்ரமதர்மம், வர்னாாஷ்ரம தர்மம், குணதர்மம், அபத்தர்மம், ஸ்ரெளத தர்மம், ஸ்திரி தர்மம், வியாஸ்தி தர்மம், ராஷ்டிர தர்மம் என பத்து வகைப்படும். இது தனி மனிதன் முதல் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பது வரை ஒவ்வொன்றும் வழிகாட்டுவதாகும். சனாதன தர்மம் என்பது ஆன்மா மற்றும் மறுபிறவி ஆகியவற்றை நம்பும் நித்திய மதங்களை குறிப்பதாகும்.

சனாதனம் என்ற சொல் இந்து மதத்துடன் தொடர்புடையது என பொதுவாக சொல்லப்பட்டாலும், இது ஜெயினர்கள் மற்றும் பெளத்த மதத்தவர்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாக உள்ளது. 19 ம் நூற்றாண்டிற்கு பிறகே சனாதன தர்மம் என்பது மற்ற மதங்களில் இருந்து வேறுபட்டு, இந்து மதத்தை குறிக்க பயன்படுத்தப்பட்டது. இது இந்து மதத்திற்குள் ஒருமைப்பாட்டை தூண்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், சனாதன தர்மம் என்பது யாரும் கேள்வி கேட்க முடியாதது. யாரும் மாற்ற முடியாதது என்று அர்த்தம், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவும் நிலையானது கிடையாது. எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும். கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற நோய்களை போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும். எதிர்க்கக் கூடாது என அமைச்சர் உதயநிதி, நோய்களுடன் ஒப்பிட்டு பேசியதன் காரணமாக அது சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version