Home Hot News உலகின் சிறந்த ரொட்டி என்ற இடத்தை பிடித்தது “மலேசியாவின் ரொட்டி சானாய்”

உலகின் சிறந்த ரொட்டி என்ற இடத்தை பிடித்தது “மலேசியாவின் ரொட்டி சானாய்”

பெட்டாலிங் ஜெயா:

“மலேசியாவின் ரொட்டி சானாய்” உலகின் சிறந்த ரொட்டி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று அனைத்துல உணவு வழிகாட்டி இணையதளமான TasteAtlas தெரிவித்துள்ளது.

” ரொட்டி சானாய்” மலேசியாவின் சிறந்த காலை உணவுத் தேர்வாகக் கூறப்பட்டது, மேலும் இது இணையதளப் பட்டியலில் உலகெங்கிலும் உள்ள “உலகின் சிறந்த 50 சிறந்த ரொட்டிகளில்” முதல் இடத்தைப் பிடித்தது.

கொலம்பியாவின் pan de bono என்ற இரண்டாவது சிறந்த ரொட்டிக்கு இணையாக நம்நாட்டின் ரொட்டி சானாய் 4.9 நட்சத்திரங்களைப் பெற்றது.

ரொட்டி சானாய் புருனே, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது. இருப்பினும் மலேசியாவின் ரொட்டிச் சானாய்க்கு இந்த அங்கிகாரம் கிடைத்துள்ளது நெட்டிசன்களிடையே கடும் வரவேற்பை பெற்றுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version