Home Top Story “என் மாடுகளுக்கு விஷம் வைச்சு கொன்னுட்டாங்கய்யா” – குமுறுகிறார் குமார்

“என் மாடுகளுக்கு விஷம் வைச்சு கொன்னுட்டாங்கய்யா” – குமுறுகிறார் குமார்

போர்ட்டிக்சன்:

சுவா பெத்தோங்கிலுள்ள கம்போங் பாரிசான் என்ற இடத்தில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் தனது ஒன்பது மாடுகள் அங்குமிங்குமாக இறந்து கிடந்ததைக் கண்டு, எருமை வளர்ப்பு பண்ணையை நிர்வகிக்கும் யோவன் குமார் நிலைகுலைந்து போனார்.

தன்னிடம் 150 எருமைகள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்பது மாடுகளும் இறந்துவிட்டதாகவும், 12 முதல் 13 எருமைகளை இன்னும் காணவில்லை என்றும் அவர் கூறினார்.

“எருமை மாடுகளின் சடலங்கள் நேற்று காலை முதல் தோட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் கட்டம் கட்டமாக கண்டெடுக்கப்பட்டன. அத்தோடு விஷம் என்று சந்தேகிக்கப்படும் பழுப்பு சர்க்கரை நிரப்பப்பட்ட ஒரு கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்ட்து என்று குமார் கூறினார்.

இறந்தவற்றில் 900 கிலோ எடையுள்ள எருமைகள் உட்பட பல வகை எருமைகள் சுமார் RM12,000 விலையில் வாங்கப்பட்டவை என்றும், எருமை வளர்ப்பில் தான் மூன்றாவது தலைமுறை என்றும், எருமைகள் இறக்கும் முன் கொள்கலனில் இருந்த விஷத்தைக் குடித்துவிட்டன என்று அஞ்சப்படுவதாகவும் ”அவர் இன்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

இது தொடர்பில் “காவல்துறை மற்றும் நெகிரி செம்பிலான் கால்நடைத் துறையில் புகார் அளிக்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஐடி ஷாம் முகமட் இந்த சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version