Home Hot News FB, WhatsApp-ஐ காலி செய்யுமாம் X.. எகிறி அடிக்கும் எலான் மஸ்க்..!!

FB, WhatsApp-ஐ காலி செய்யுமாம் X.. எகிறி அடிக்கும் எலான் மஸ்க்..!!

சமுக வலைத்தளத்தில் கொடிக்கட்டி பறக்கும் மெட்டா, டிவிட்டர் நிறுவனர்களான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் எலான் மஸ்க் மத்தியில் பல மாதங்களாக இருந்து வந்த சண்டை திடீரென காணமால் போனது. ஒருபக்கம் இருவரும் சண்டையிட அழைப்பு விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் தளத்திற்கு போட்டியாக அப்படியே காஃபி அடித்து திரெட்ஸ் என்ற தளத்தை மார்க் ஜூக்கர்பெர்க் தலைலமையிலான மெட்டா அறிமுகம் செய்த நிலையில், கடுமையான விமர்சனங்களை பெற்று சில வாரங்களிலேயே காற்று போன பலூன் போல மாயமானது.

இதற்கு பழி வாங்கும் விதமாக X என அழைக்கப்படும் டிவிட்டரில் அடுத்தடுத்து புதிய சேவைகளை கொண்டு வர எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். இதில் முக்கியமாக பல சேவைகள் பேஸ்புக், வாட்ஸ்அப் தளங்களில் இருக்கும் சேவைகளை ஒருங்கிணைத்து டிவிட்டர் அதாவது X தளத்தில் அளிக்கப்போவதாக தெரிகிறது. எக்ஸ் தளத்தின் சிஇஓ-வான லிண்டா யாக்கரினோ அடுத்து டிவிட்டரில் வரப்போகும் மாற்றங்கள், சேவைகள் குறித்து ஒரு டக்கரான வீடியோவை வெளியிட்டார்.

இந்த வீடியோவில் ஒருவரின் பாலோவர்களை பார்ப்பது முதல், வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் மெசேடஞர் போன்ற சாட்டிங் சேவை, டிவிட்டருக்குள்ளேயே வீடியோ கால் வசதி, வீடியோ பிரிவில் ஷாட் வீடியோ, நீண்ட நேரம் கொண்ட வீடியோ, வெர்டிக்கல் வீடியோ என அனைத்து சேவைகளும் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதோடு புகைப்பட பதிவுகளுக்கு தனி முக்கியதுவம் மற்றும் மேம்பட்ட சேவைகள், இதைவிட முக்கியமாக பேமெண்ட் சேவை அதாவது டிவிட்டர் கணக்கு வைத்துள்ள வர்கள் மத்தியில் பேமெண்ட் சேவைகள், டிவிட்டர் பயனர்கள் பதிவிடும் அனைத் திற்கும் விளம்பர வருமானத்தில் பங்கீடு என பல முக்கிய சேவைகளை அறிமுகம் செய்து வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளத்தில் இருக்கும் சேவைகளை மிக் சியில் போட்டு அடித்தது போல் டிவிட்டரில் அளிக்க உள்ளார் எலான் மஸ்க்.

டிவிட்டரில் இருக்கும் வாடிக்கையாளர்கள் எதாவது ஒரு வகையில் அதன் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் எலான் மஸ்க் டிவிட்டர் என்னும் X தளத்தை சூப்பர் ஆப் ஆக மாற்றும் இலக்கை நோக்கி ஒடிக்கொண்டு இருக்கிறார். விரைவில் எக்ஸ் தளத்தில் ஷாப்பிங் செய்யப்படும் வசதிகளும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version