Home மலேசியா அரசியல் பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டியா?

பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டியா?

பெலாங்காய் மாநில இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல்  இன்று காலை 9 மணிக்கு Dewan Orang Ramai Felda Kemasulவில் தொடங்கியது.  வேட்பாளர்கள் காலை 10 மணி வரை தங்களது வேட்புமனுக்களை வேட்புமனு மையத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பெலாங்காய் மாநில இடைத்தேர்தலுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நாளாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது, அதே நேரத்தில் முன்கூட்டியே வாக்குப்பதிவு அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெறும். இடைத்தேர்தலுக்கான 14 நாள் பிரச்சாரம் இன்று தொடங்கி அக்டோபர் 6ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நடைபெறுகிறது.

பாரிசான் நேஷனல் (BN) பெந்தோங் அம்னோ கமிட்டி உறுப்பினர் டத்தோ அமிசார் அபு ஆடாம் (50) என்பவரை வேட்பாளராகக் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் பெந்தோங் பாஸ் துணைத் தலைவர் காசிம் சமாட் (62), பெரிக்காத்தான் நேஷனல் (PN) சார்பில் போட்டியிடுவார்.  மேலும், Pertubuhan Suara Anak Pahang தலைவர் Haslihelmy DM Zulhasli 36, சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலில் 36 காவலர்கள் மற்றும் 3 பேர் வராத வாக்காளர்கள் என மொத்தம் 16,456 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சிலாங்கூர் ஷா ஆலமில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹாருன் (53) இறந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version