Home Hot News ரேடியோ டெய்ஸ் ஆசியா 2023 மாநாடு 300 பேராளர்கள் பங்கேற்பு.

ரேடியோ டெய்ஸ் ஆசியா 2023 மாநாடு 300 பேராளர்கள் பங்கேற்பு.

மலேசியா இவ்வாண்டு தொடர்ச்சியாக 3ஆவது முறையாக ரேடியோ டெய்ஸ் ஆசியா 2023 எனும் மாநாட்டை ஏற்று நடத்தி இருக்கின்றது. தொழில்துறை வர்த்தக நிகழ்ச்சி களில் இது மிகமுக்கியமானதாக அமைந்திருக்கிறது என்று மலேசிய மாநாட்டு கண் காட்சி வாரியமான மைசெப் இடைக் காலத் தலைமை நிர்வாக அதிகாரி ஸைன் அஸ்ராய் ரஷிட் தெரிவித்தார்.

உலகம் முழுமையும் 30 நாடுகளில் இருந்து 300 பேராளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். ஆசியப் பசிபிக் பிரதேசத்தைச் சேர்ந்தவர் களும் அவர்களுள் அடங்கும். இது 2 நாள் மாநாடாக நடைபெற்றது. மலேசிய மாநாட்டு கண்காட்சி வாரியத்தின் ஆதரவுடன் ரேடியோ டெய்ஸ் ஹீரோ இதனை ஏற்பாடு செய்தது.

தொழில்துறையினருக்கும் தகவல் துறையில் ஈடுபட்டிருப்போருக்கும் புத்தாக்கப் படைப்பில் ஈடுபட்டிருப்போருக்கும் இது ஒரு சிறந்த களனமாகவும் அமைந் திருக்கிறது.

மாநாட்டில் பங்கேற்றவர்கள் கலந்துரையாடல்களிலும் பங்கேற்றனர். தங்கள் நாடுக ளில் உள்ள ஒளி/ஒலிபரப்பு நிலையங்கள், வர்த்தகங்கள் உள்ளிட்ட தங்கள் அனுபவங்களை இவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version