Home Top Story உங்கள் வீட்டில் பல்லி தொல்லை இருக்கிறதா..? இதை செய்து பாருங்கள்

உங்கள் வீட்டில் பல்லி தொல்லை இருக்கிறதா..? இதை செய்து பாருங்கள்

இரவு நேரங்களில் நம் வீட்டுச் சுவர்களில் பல்லிகள் தோன்றுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். வீட்டில் ஒரு பல்லி இருந்தால் போதும்.. அவை முட்டையிட்டு பெருகி வீடு முழுவதும் ஆங்காங்கே பல்லிகளால் நிறைந்து காணப்படும். பல்லிகள் சுவரில் இருக்கும் பூச்சிகளை உண்பதன் மூலம் நமக்கு ஒரு வகையில் உதவினாலும், பலர் அவை வீட்டின் சுவர்களில் இருப்பதை விரும்புவதில்லை. சிலர் பல்லியை பார்த்தாலே வெறுப்படைகிறார்கள். மேலும், அவற்றிற்கு பயப்படுவதும் உண்டு.

அதுமட்டுமல்லாமல் இரவில் பல்லியின் சத்தம் நம்மை தூங்க முடியாமல் செய்கிறது. சில பேருக்கு அதன் சத்தம் எரிச்சலாகவும் இருக்கும். பல முயற்சிகள் செய்தும் உங்கள் வீட்டிலிருக்கும் பல்லிகளை விரட்ட முடியவில்லை என கவலையாக இருக்கா? இதோ சில குறிப்புகள்;

நாப்தலீன் பந்துகள் : துணிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க நாப்தலீன் பந்துகளைப் பயன்படுத்துவது வழக்கம். அதைக் கொண்டு பல்லிகளையும் நம்மால் விரட்ட முடியும். காரணம் பல்லிகள் அதன் வாசனையை விரும்புவதில்லை. இந்த பந்துகளை வீட்டின் மூலைகளில் போட்டு வைக்கலாம்.

முட்டை ஓடுகள் : முட்டையை உடைத்த பின் நம்மில் பல பேர் முட்டை ஓடுகளை தூக்கி எறிவோம். ஆனால் பல்லிகளை முட்டை ஓடுகளால் விரட்ட முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? பல்லிகள் நடமாடும் சுவர்களுக்கு அருகில் முட்டை ஓடுகளை வைத்தால் அதன் நாற்றம் தாங்காமல் பல்லி ஓடி விடும்.

கருப்பு மிளகு ஸ்ப்ரே : பிளாக் பெப்பர் ஸ்ப்ரே பல்லியின் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே பல்லி நடமாட்டம் தெரியும் இடங்களில் அதாவது சுவர்களில் கருப்பு மிளகு ஸ்ப்ரேவை தெளிக்க வேண்டும். தெளித்த உடனேயே பல்லிகள் அவ்விடத்தை விட்டு ஓடிவிடும்.

வெங்காயம் : வெங்காயத்தின் கடுமையான வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. வெங்காயத்தை நறுக்கி அது நடமாடும் சுவற்றின் அருகில் வைத்தாலோ, அதன் சாற்றை சுவர்களில் தெளித்தாலோ பல்லிகள் விரைவில் மறையும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version