Home Hot News அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு

பெரும் சர்ச்சைகளின் மத்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மேலும் ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்த்துள்ள நிலையில் அதற்கான கும்பாபிஷேக தேதி ஜனவரி 22, 2024 என உறுதி செய்யப்பட் டுள்ளது. 12 மணிநேரத்தில் சுமார் 75, 000 பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்கிறார் ஆலய தலைவர் நிருபேந்திர மிஸ்ரா.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும் என தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அதே மாதத்தில் ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில் ஆணையத்தின் துணைத்தலைவர் விஷால் சிங் கூறுகையில் அயோத்தி மெகா திட்டம் 2031 ன்படி கோவிலை சுற்றி 500 மீ சுற்றளவில் மத சடங்குகள் மேற் கொள்ளவே அனுமதிக்கப்படும்.மேலும் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் வர்த்தகம் உள் ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

ராம ஜென்மபூமி பாதுகாப்பு மற்றும் ராமர் கோவிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு தான் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இந்த பகுதிகளில் உள்ள கட்டி டங்கள் அதிகபட்ச உயரம் 7.5 மீட்டராக மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் அந்த பகுதிகளில் இருக்கும் நீர்த்தேக்கங்கள் ,குளங்கள் ,வடிகால் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் அல்லது வடிகால் ஆதாரங்களின் பாதுகாப்பு போன்றவைகள் மெகா திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த இடங்கள் ஆறு மீட்டர் சுற்றளவில் எந்த கட்டுமானமும் இருக்காது என தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version