Home Top Story இன்று காலை 9 மணி நிலவரப்படி நாட்டின் ஐந்து பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின்தரம் பதிவு

இன்று காலை 9 மணி நிலவரப்படி நாட்டின் ஐந்து பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின்தரம் பதிவு

கோலாலம்பூர்:

ன்று காலை 9 மணி நிலவரப்படி நாட்டின் ஐந்து பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன.

இதில் மலாக்காவில் உள்ள புக்கிட் ரம்பாய் பகுதி மிக அதிகமாக 153 API அளவோடு பதிவானது.

சுற்றுச்சூழல் துறையின் (DOE) கீழுள்ள மலேசியன் காற்று மதிப்பீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) இணையதளத்தின் அடிப்படையில், 100க்கு மேல் API உள்ள மற்ற பகுதிகளாக மலாக்கா நகர்ப்பகுதி City (146), நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சன் (109) மற்றும் பத்து பகாட் (134) மற்றும் ஜோகூரின் தங்காக் (116) என்பன பதிவாகியுள்ளன.

நாட்டின் ஏனைய 51 பகுதிகள் 51-100 அளவீடுகளுடன் மிதமான காற்று மாசுக் குறியீட்டை பதிவு செய்துள்ளன, மேலும் 12 பகுதிகள் 50 க்கும் குறைவான API அளவீடுகளை பதிவு செய்துள்ளன.

காற்று மாசுக் குறியீடு 0-50 வரையிலான API காற்றின் தரம் நன்றாக இருப்பதைக் குறிக்கிறது; 51 முதல் 100 வரை, மிதமான தரம் ; 101 முதல் 200 வரை, ஆரோக்கியமற்றது; 201 முதல் 300 வரை, மிகவும் ஆரோக்கியமற்றது; மற்றும் 300க்கு மேல், அபாயகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version