Home Hot News பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி இடப்பற்றாக்குறை: விரைவில் தீர்வு

பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி இடப்பற்றாக்குறை: விரைவில் தீர்வு

பெர்மாத்தாங் திங்கி,

இடப் பற்றாகுறையை எதிர்நோக்கி வரும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி  விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன்  உறுதி கூறினார்.

இங்கு பள்ளி திடலில் நடைபெற்ற பாலர் பள்ளியின்  45 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்துப் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.தற்போது மூன்று வகுப்பறைகளுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் பாலர் பள்ளியில் அதிகபடியாக 75 மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் வாய்ப்புகள் உள்ளன.ஆனால்  ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் வருவதாக பள்ளி நிர்வாகமும்,பள்ளி மேலாளர் வாரியம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகிய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுற்று வட்டாரத்திலுள்ள பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இப்பள்ளியின் பாலர் பள்ளியில் இணைக்க இயலாமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

இது பற்றி மேற்கண்ட தரப்பினர் கடந்த பல ஆண்டுகளாக வகுப்பறைகளின் எண் ணிக்கைகளை அதிகரிக்கும் விண்ணத்தை முன் வைத்தும் பயனளிக்கவில்லை என்று பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ கா.புலவேந்திரன் உள்ளிட்டோர் முறையிட்டுள்ளனர். எனவே தற்போது மூன்று வகுப்பறைகளைக் கொண்டு செயல் படும் இப்பள்ளியின் பாலர் பள்ளியை நான்கு வகுப்பறைகளுடன் செயல்படு வதற்கான ஏற்பாடுகளைக் கண்டறிவதற்கான சந்திப்புக் கூட்டத்தை மாவட்ட கல்வி
அதிகாரிகளுடன் உடனே நடத்த இருப்பதாக கூறினார்.

அதன்படியே நேற்று அவர் மாவட்ட கல்வி அதிகாரயைக் கண்டு நிலவரங்களைக் கேட்டறிந்தார்.மாவட்ட கல்வி அதிகாரியின் கருத்துக்கள் விரைவில் நடைபெறவுள்ள பள்ளி நிர்வாகம்,மேலாளர் வாரியம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியோருடனான சந்திப்புக் கூட்டத்திற்குப் பின்னர் அடுத்தக்கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் நேற்று மாலை மக்கள் ஓசையிடம் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version