Home மலேசியா மனநல பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் அன்வார் அழைப்பு

மனநல பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் அன்வார் அழைப்பு

இன்று கொண்டாடப்படும் உலக மனநல தினம் 2023 உடன் இணைந்து, மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய களங்கத்தை நிறுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார். மனநல விழிப்புணர்வு சின்னமாக பச்சை நிற ரிப்பன் அணிந்திருந்த அன்வார், செவ்வாய்கிழமை (அக் 10) மக்களவையில் அமைச்சரின் கேள்வி நேரத்தின் போது அழைப்பு விடுத்தார்.

மன ஆரோக்கியம் அனைவருக்கும் சொந்தமானது, களங்கத்தை நிறுத்துங்கள். நான் அணியும் பச்சை நிற ரிப்பன் மன ஆரோக்கியத்தின் அனைத்துலக சின்னமாகும். 2023 உலக மனநல தின வாழ்த்துக்கள் என்று அவர் கூறினார். மனநல விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் அடையாளமாக பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பச்சை நிற ரிப்பன்களை அணிந்திருந்தனர்.

மக்களவையில் 12ஆவது மலேசியா திட்ட இடைக்கால மதிப்பாய்வு மீதான பிரேரணையை தாக்கல் செய்த அன்வார், இந்நாட்டில் அதிகரித்து வரும் கவலைக்குரிய சுகாதாரப் பிரச்சினையைச் சமாளிக்க அரசாங்கம் ஒரு மனநல நிறுவனத்தை நிறுவும் என்று அறிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version