Home Top Story தாய்லாந்து வெள்ளம்: இந்தாண்டு மொத்தம் 23 பேர் மரணம்

தாய்லாந்து வெள்ளம்: இந்தாண்டு மொத்தம் 23 பேர் மரணம்

பேங்காக்:

டந்த செப்டம்பர் மாதம் பருவமழை தொடங்கியதிலிருந்து மொத்தம் 23 பேர் வெள்ளத்தில் மாண்டதாகவும் 33 பேர் காயமடைந்ததாகவும் தாய்லாந்தின் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கனமழைக்கு தொடர்ந்து வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானியல் ஆய்வு மையம் இன்று செவ்வாய்க்கிழமை எச்சரித்துள்ளது. அத்தோடு 32 வட்டாரங்களில் வெள்ள அபாயம் குறித்தும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைநகர் பேங்காக்கிலும் புகழ்பெற்ற உல்லாசத் தலமான புக்கெட்டிலும் கனமழை பெய்யுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கிலிருந்து அந்தமான் கடல், தாய்லாந்து வளைகுடா ஆகியவற்றின்மேலாக வீசும் பருவக்காற்று தாய்லாந்திற்கு கனமழையைக் கொண்டுவரும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.

இந்தப் பருவத்தில் நாட்டிலுள்ள 62,000 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அது குறிப்பிட்டது.

அண்மைய வாரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், நிவாரண உதவிகளுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version