Home Hot News மதிய சாப்பாட்டுக்குப் பிறகு வரும் தூக்கம்; பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன?

மதிய சாப்பாட்டுக்குப் பிறகு வரும் தூக்கம்; பணியிடத்தில் தர்மசங்கடம்… தீர்வு என்ன?

உங்களுடைய வயது இந்தப் பிரச்னைக்கான காரணமாக இருக்காது. சாப்பிட்ட உடன் சிறிது நேரம் தூங்கிப் பழகியிருப்பீர்கள். இரவு நேரத்தில் முழுமையாகத் தூங்க முடி யாததன் விளைவாகவும் இருக்கலாம். மூன்றாவதாக, வயிறு முட்ட சாப்பிடுவதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்யக் கூடாது என்பதுதான் சரி. ஆனால், தூக்கத்தைத் தவிர்ப்பதற்காக சில நிமிடங்கள் மட்டும் இப்படி நடந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குப் பின்பற்றலாம். அதன் பிறகு, பகலில் தூங்கும் வழக்கம் தானாக மாறிவிடும். இரவிலும் தூக்கம் தடைபடாது. ஆழ்ந்து உறங்குவீர்கள்.

காலை உணவை சாப்பிட்டுவிட்டு, இடையில் எதையும் சாப்பிடாமல், நேரடியாக மதியத்துக்கு கார்போஹைட்ரேட் சேர்த்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பகலில் நிச்சயம் தூக்கம் வரும். உங்களுடைய சொந்த அலுவலகம், வீடு என்றால் சாப் பிட்டதும் சிறிது நேரம் தூங்கலாம், தவறில்லை. ஆனால், சாப்பிட்ட உடனேயே தூங்குவதால் `கேஸ்ட்ரோ ஈஸோபெகல் ரெஃப்ளெக்ஸ்’ (Gastroesophageal reflux disease -GERD) என்ற பிரச்னை வரலாம். அதன் விளைவாக சாப்பிட்டதும் உணவுக் குழாயில் ஏறி, சளி, இருமல் ஏற்படலாம். இரைப்பை புண்ணாகலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version