Home Top Story கமலின் 234ஆவது படத்தின் அறிமுக டீசர் நவம்பர் 7இல் வெளியாகிறது

கமலின் 234ஆவது படத்தின் அறிமுக டீசர் நவம்பர் 7இல் வெளியாகிறது

கமல்ஹாசனும், மணிரத்னமும் நாயகன் என்ற படத்தில் முதன் முதலாக இணைந்தார்கள். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்த போதும் அதன் பிறகு எந்த படத்திலும் அவர்கள் இணையவில்லை. தற்போது மீண்டும் கமலின் 234வது படத்தில் அவர்கள் கூட்டணி இணையப் போகிறது. இந்த படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் டீசர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன.

இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிக்க இருக்கும் 234வது படத்தின் அறிமுக டீசர் பணிகள் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்த டீசர் வருகிற நவம்பர் 7ம் தேதி உங்களது பார்வைக்கு வைக்கப்படும் என்று கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில், கமலின் பிறந்தநாளில் அவரது 234வது படத்தின் டீசர் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version