Home Top Story மக்கள் ஓசை நடத்திய ‘நான் செய்தியாளர்’ திரட்டேடு போட்டி- நாளை பரிசளிப்பு விழா

மக்கள் ஓசை நடத்திய ‘நான் செய்தியாளர்’ திரட்டேடு போட்டி- நாளை பரிசளிப்பு விழா

 ரெ. மாலினி

 மலாக்கா:

லாக்கா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ‘நான் செய்தியாளர்’ எனும் திரட்டேடு போட்டியை மக்கள் ஓசை நடத்தியது. அதன் பரிசளிப்பு விழா மக்கள் ஓசை இயக்குனர் டத்தோ ச. கோபாலகிருஷ்ணன் அவர்க ளின் தலைமையில் வரும் சனிக்கிழமை (அக்டோபர், 28), ஆயர் குரோ இளைஞர் விளையாட்டு அரங்கத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

போட்டியில் 18 பள்ளிகள் பங்குபெற்றிருந்த நிலையில், அதன் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உற்சாகமாக உள்ளனர்.

இதற்கு முன்னர் பேராக் மாநிலத்தில் மாவட்டம் மாவட்டமாகவும், பினாங்கு மாநிலத் தின் தென் செபராங் பிறை மாவட்டத்திலும்   இப்போட்டி வெற்றி கரமாக நடத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மலாக்கா மாநிலத்தில் 21 தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்றன. மாநில தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் சு. கிருஷ்ணன் அவர்களின் தலைமையில் 18 பள்ளிகள் திரட்டேடு தயாரிக்கும் போட்டியில் பங்குபெற்றிருந்தன. பள்ளிகளைச் சார்ந்து 520 மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிபடுத்தியிருந்தனர்.

இரண்டு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டிருந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 20 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். (வெற்றியாளர்களின் பட்டியலை ஏற்கனவே மக்கள் ஓசை வெளியிட்டிருந்தது).

வெற்றியாளர் தேர்வு குழுவாக மலாக்கா மாநில தமிழர் சங்கம் அதன் தலைவர் ச. குணசேகரன் அவர்களின் தலைமையிலான குழுவினர் மக்கள் ஓசையுடன் இணைந்து ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், பங்கு பெற்ற மாணவர்களும் பள்ளிகளும் ஆவலுடன் காத்திருந்த நாளைய பரிசளிப்பு விழாவில் 700 க்கும் அதிகமானோர் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விழாவிற்கு மலாக்கா இளைஞர், விளையா ட்டு மேம்பாடு மற்றும் அரசு சாரா அமைப்பு ஆட்சிக்குழு உறுப்பி னரும், காடேக் சட்டமன்ற உறுப்பின ருமாகிய மாண்பு மிகு பி. சண்முகம் அவர்கள் சிறப்பு வருகைப் புரியவுள்ளார். அத்துடன் கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கூ போய் தியோங் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிப்பார். நிகழ்ச்சிக்கு அங்குள்ள பொது அமைப்பினரும், வர்த்தகர்களும் பேராதரவை வழங்கியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version