Home COVID-19 RM505 மில்லியன் மதிப்புள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் ஜூன் 1 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன – PAC

RM505 மில்லியன் மதிப்புள்ள கோவிட்-19 தடுப்பூசிகள் ஜூன் 1 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன – PAC

பெட்டாலிங் ஜெயா:

505 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மொத்தம் 8.5 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் கடந்த ஜூன் 1 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டன என்று, கோவிட்-19 தடுப்பூசியைக் கையாளுவதற்கான பொதுக் கணக்குக் குழு (PAC) தெரிவித்துள்ளது.

முன்னர் சுகாதார அமைச்சகம் தேவையான அளவுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறித்த தடுப்பூசிகளை வாங்கியது, ஆனால் தடுப்பூசிக்கான தேவை குறைதல், தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் மற்றும் வெளிநாடுகளால் வழங்கப்பட்ட நன்கொடை தடுப்பூசிகள் அதிகமாக கிடைத்தது போன்றவையும் இந்த தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதற்கு காரணம் என்று PAC குறிப்பிட்டுள்ளது.

“கோவிட்-19 தடுப்பூசி தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து 18 மாதங்கள் வரை காலாவதி தேதி நீட்டிக்கப்பட்டிருந்தாலும், RM505 மில்லியன் மதிப்புள்ள 8.5 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் ஜூன் 1, 2023 இல் காலாவதியாகிவிட்டன” என்று அது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியாகும் RM927,000 மதிப்புள்ள 850,000 யூனிட் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) boot covers வீணாகும் அபாயத்தில் இருப்பதாக இன்று (அக்.30) அதிகாரப்பூர்வ நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் PAC மேலும் கூறியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version