Home மலேசியா மாணவர்களுக்கான உதவித்தொகையை மாரா அதிகரிக்குமா?

மாணவர்களுக்கான உதவித்தொகையை மாரா அதிகரிக்குமா?

 மஜ்லிஸ் அமானா ரக்யாட் (மாரா) பொருளாதார சவால்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை விகிதத்தை  அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆய்வு செய்யும். புதிய உதவித்தொகை விகிதம் குறித்து எந்த முடிவும் எடுப்பதற்கு முன், நாட்டின் நிதித் திறன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மாரா தலைவர் அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

துணைப் பிரதமர் (அகமட் ஜாஹிட் ஹமிடி) சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு விஜயம் செய்தபோது, இந்த விஷயத்தை தீவிரமாக மதிப்பீடு செய்ய எனக்கும் மாராவுக்கும் அறிவுறுத்தியிருந்தார். நிதித் தாக்கத்துடன் இது கவனமாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் (உதவித்தொகைக்கான) ஒதுக்கீடு தேசிய நிதியிலிருந்தும் வருகிறது என்று அவர் இன்று இங்கு நடந்த ஒரு நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ப மாணவர்களுக்கான உதவித்தொகையை மாரா அதிகரிக்குமா என அவரிடம் கேட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் துணைப் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும், அரசாங்கம் பயனுள்ள தீர்வைக் காண முயற்சித்து வருவதாகவும் அசிரஃப் வாஜ்டி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version