Home Hot News பேராசிரியர் இராமசாமி பெருகி வரும் ஆதரவு! மக்களின் நன்கொடை 13 லட்சத்தை தாண்டியது !

பேராசிரியர் இராமசாமி பெருகி வரும் ஆதரவு! மக்களின் நன்கொடை 13 லட்சத்தை தாண்டியது !

கோலாலம்பூர்,

சர்ச்சைக்குரிய சமயப் போதகரான டாக்டர் ஜாக்கிர் நைக்கிற்கு பேராசிரியர் இராமசாமி 15 லட்சத்து20 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 2ஆம் தேதி உத்தரவிட்டது. பேராசிரியர் இராமசாமி தம்முடைய அறிக்கைகள் வழி ஜாக்கிர் நைக்கிற்கு களங்கம் விளை வித்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தியர்களுக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் இராமசாமி இந்த முடிவு குறித்து அதிர்ச்சசி அடைந்திருந்தார். இந்த தொகையை செலுத்துவது மிகவும் கடின மானதும் நெருக்கடியானதும் ஆகும் என்பதை உணர்ந்த மக்களிடம் உதவி கோரினார்.  மலேசியத் தமிழர் குரல் இயக்கம் அவருக்கு உதவ நிதி திரட்டும் நடவடிக் கையை முன்னெடுத்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கேள்வியுற்ற இந்தியர்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் பேராசிரியர் இராமசாமிக்கு தம்மால் முடிந்த உதவிகளை விரைந்து உதவிவரு கின்றனர்.

இந்த திட்டத்திற்குப் பொறுப்பேற்றிருக்கும் மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் இப்போதுவரை வரும் 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வளவுபெரிய தொகையைச் செலுத்தும் வசதியை பேராசிரியர் கொண்டிருக் க வில்லை என்றும் இந்திய சமுதாய மக்கள் தமக்குக் கரம் கொடுக்க வேண்டும் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அவ்வகையில் இப்போதுவரை சுமார் 13 லட்சம்  9 ஆயிரம் வெள்ளிக்கு மேல் மக்கள் செலுத்தியுள்ளனர் என்றும், இந்தியர்கள் எப்போதும் நன்றியுள்ளவர்கள், அவர்களின் ஆதரவும் அன்பும் எங்களை மலைக்க செய்கிறது எனவும் குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version