Home Top Story பிக்பாஸ் நிகழ்ச்சி மனநிலையை பாதிக்கும் – குழந்தைகள் நல ஆர்வலர் எதிர்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சி மனநிலையை பாதிக்கும் – குழந்தைகள் நல ஆர்வலர் எதிர்ப்பு

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களை உருவகேலி செய்தல், இழிவுபடுத்துதல் அதிகமாகி வருகிறது; இதனால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் பேசிய குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயன், “குடும்பச் சூழல், சமூக சூழல் இரண்டிலும் இருந்துதான் குழந்தைகள் பலவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களை உருவகேலி செய்தல், இழிவுபடுத்துதல் அதிகமாகி வருகிறது. ஆணாதிக்க சிந்தனையின் எச்சங்களும் நிகழ்ச்சியில் பரவியுள்ளன.

இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கும்போது, அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. இது குழந்தைகளிடையே வன்மத்தை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்” என கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version