Home மலேசியா 4 நாடாளுமன்ற உறுப்பினரை காலி செய்யும் பெர்சத்துவின் சட்ட நடவடிக்கை தோல்வி: பணிக்கு திரும்பிய MP

4 நாடாளுமன்ற உறுப்பினரை காலி செய்யும் பெர்சத்துவின் சட்ட நடவடிக்கை தோல்வி: பணிக்கு திரும்பிய MP

கோலாலம்பூர்: பாப்பர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்மிசான் முகமட் அலி மற்றும் மூன்று  நாடளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இடங்களை காலி செய்யும் சட்ட நடவடிக்கையை தொடங்கவிருந்த பெர்சத்துவின் முயற்சியை உயர்நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து அவர் வழக்கம் போல் பணிக்குத் திரும்பினார். சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சபா மற்றும் சரவாக் விவகார அமைச்சராகவும் இருக்கும் ஆர்மிசான், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

எனது பணியைத் தொடர வேண்டிய நேரம் இது, குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியில் உள்ள சமூகத்திற்காக என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் சந்தித்தபோது கூறினார். மக்களவை சபாநாயகரின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தின் முடிவை மீண்டும் கூறினார். முன்னதாக, நீதிபதி அமர்ஜீத் சிங், சபாநாயகரின் முடிவுகள் போன்ற நாடாளுமன்றத்தில் எழும் விஷயங்களை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றங்கள் கூட்டாட்சி அரசியலமைப்பால் தடைசெய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

ஆர்மிசான், கைருல் ஃபிர்தௌஸ் அக்பர் கான், ஜொனாதன் யாசின் மற்றும் மத்பாலி மூசா ஆகியோருக்கு முறையே பாப்பர், பத்து சாபி, ரனாவ் மற்றும் சிபிடாங் ஆகிய இடங்களை காலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று திவான் ரக்யாட் சபாநாயகர் ஜோஹாரி அப்துல் ஜனவரி மாதம் கூறியிருந்தார். முன்பு கட்சியில் இருந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடங்களை காலி செய்யாத ஜோஹாரியின் முடிவு “சட்டவிரோதத்தால் கறைபட்டது” என்று பெர்சத்து கூறியிருந்தது.

கடந்த பொதுத் தேர்தலில் பெர்சாத்து GRS-ன் ஒரு பகுதியாக இருந்தபோது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கலும் கபுங்கன் ரக்யாட் சபா (GRS) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும், பொதுத் தேர்தலுக்குப் பிறகு, GRS ஒரு கூட்டணி உறுப்பினராக பெர்சத்துவைக் கைவிட்டு, அன்வார் இப்ராஹிமை பிரதமராக ஆதரித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version