Home Hot News அண்டார்டிகாவில் தரையிறங்கியது பயணிகள் விமானம்!

அண்டார்டிகாவில் தரையிறங்கியது பயணிகள் விமானம்!

லகில் முதன் முறையாக அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி புதிய சாதனையை படைத்துள்ளது.

பனி படர்ந்த அண்டார்டிகாவை அடைவது என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலான பணியாகவே இருந்து வருகிறது. ஆனாலும் ஆராய்ச்சி உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக அண்டார்டிகாவுக்கு சென்று ஆக வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதற்கு விமானம்  மூலமாக செல்வது என்பது இயலாத காரியமாகவே இதுவரை இருந்து வந்தது.

இந்நிலையில், நார்வே பயணிகள் விமானம் ஒன்று   அங்கு  வெற்றிகரமாக தரையிறங்கி இனி அங்கு விமானத்தில் செல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை  உருவாக்கி உள்ளது.

நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் விமானமே இந்தச் சாதனையை படைத்திருக்கிறது.

கடந்த 15ம் தேதியன்று  அண்டார்டிகாவின் குயின் மவுட் லேண்ட் எனும் இடத்தில் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை அதன் விமானிகள் தரையிறக்கியுள்ளனர். நார்வே நாட்டிலிருந்து 45 விஞ்ஞானிகள் மற்றும் 12 தொன்மைப் பொருட்களுடன் புறப்பட்ட இந்த விமானம் தென்னாபிரிக்காவில் தரையிறங்கி எரிபொருளை நிரப்பியது.
அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சுமார் 40 மணி நேர பயணத்திற்கு பிறகு அண்டார்டிகாவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. இதன் மூலம் இனி அண்டார்டிகாவிலும் பயணிகள் விமானத்தை தரையிறக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த செய்தி உலகில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version