Home Top Story மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கியிருந்த 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்

மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கியிருந்த 121 மலேசியர்கள் தாயகம் திரும்பினர்

சிப்பாங்:

மியன்மாரில் வேலை மோசடியில் சிக்கிய 121 மலேசியர்கள் மீட்கப்பட்டு, மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் லார்க்கிங்கில் உள்ள ஒரு மோசடி கும்பலின் கீழ் பணிபுரிந்தபோது, ​​அப்பகுதியில் உள்நாட்டுப் போர் வெடித்தது என்றும், குறித்த 121 பேரும் சீனாவின் குன்மிங்கில் இருந்து விமானம் மூலம் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ முகமட் ஆலமின் தெரிவித்தார்.

“லார்க்கிங்கில் உள்நாட்டுப் போர் வெடித்ததாக முதலில் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது, உடனடியாக மியன்மார் நாட்டு அதிகாரிகள் அங்கு ஒரு நடவடிக்கையைத் தொடர்ந்து 26 மலேசியர்களை மீட்டனர்.

“ஆனால், அவர்களைத் திரும்ப நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தியபோது, அடுத்த வாரங்களில் அதிகமான மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மொத்தம், 128 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டனர், உடனடியாக நாங்கள் அவர்களை மோதல் பகுதியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தோம்” என்று அவர் கூறினார் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version