Home Hot News வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை!

வெளிநாட்டு ஊழியர் ஒதுக்கீடு மோசடி கும்பல் மீது கடுமையான நடவடிக்கை!

சுபாங் ஜெயா:

தற்போது விசாரணையில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு மோசடி சிண்டி கேட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று மனித வள அமைச்சர் அமைச்சர் வ. சிவக்குமார் தெரிவித்தார்.

மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. நாங்கள் தற்போது சம்பந்தப்பட்ட தரப்பினரை அடையாளம் கண்டு வருகிறோம்.

மலேசியாவில் வேலை இல்லாமல், பிற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் எந்த முதலாளிகள் அல்லது தரப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். நான் இதில் தீவிரமாக இருக்கிறேன். அமைச்சரவைக்குப் பிந்தைய கூட்டத்திலும் நான் அதைப் பற்றி விவாதித்தேன்,அதைக் கையாள்வதில் உறுதியான நடவடிக்கை எடுக்க JTK (JTK (Jabatan Tenaga Kerja) துறைக்கு அறிவுறுத்தினேன். என் னைப் பொறுத்தவரை, நாட்டின் இமேஜைப் பாது காக்க இது மிகவும் முக்கியமானது, ”என்று நேற்று சுபாங் ஜெயாவில் மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் (பிரிமாஸ்) ஆண்டுப் பொதுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த சிண்டிகேட்டின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திய ஒரு ஊடக அறிக்கை தொடர்பான மனிதவள அமைச்சின் விசாரணையின் வளர்ச்சி குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version