Home Hot News கோல சிலாங்கூரில் திடீர் வெள்ளம்; 75 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

கோல சிலாங்கூரில் திடீர் வெள்ளம்; 75 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம்

ஷா ஆலம்:

நேற்று மதியம் பெய்த கனமழையைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் கோல சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் PPS Sekolah Kebangsaan Jaya Setia மற்றும் Balai Raya Parit Mahang ஆகிய இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.

உலு சிலாங்கூரில் உள்ள கம்போங் சுங்கை செலிசெக்கில் உள்ள சுங்கை பெர்னாம் ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 27.1 மீட்டரைக் கடந்துள்ளதாகவும், ஆனால் இன்று காலை 9 மணி நிலவரப்படி சற்று முன்னேற்றம் காணப்படுவதாகவும் publicinfobanjir.water.gov.my என்ற இணையதளம் தெரிவிக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version