Home விளையாட்டு மீஃபா பியோன் கால்பந்துப் போட்டியில் சிலாங்கூர் அணிகள் சாதிக்கும்

மீஃபா பியோன் கால்பந்துப் போட்டியில் சிலாங்கூர் அணிகள் சாதிக்கும்

 

எஸ். வெங்கடேஷ்

கோலாலம்பூர், டிங். 21-

மீஃபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 23, 24ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள  தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மீஃபா பியோன்  கால்பந்துப் போட்டியில் சிலாங்கூர் அணிகள் சாதிக்கும் என பெட்டாலிங் மாவட்டக் கால்பந்துச் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பினாங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில் 60 அணிகள் பங்குபெறவிருக்கின்றன. ஆண் – பெண் என இருபாலருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தைப் பிரதிநிதித்து 8 அணிகள் களம் இறங்குகின்றன.

அந்த அணிகளை சிலாங்கூர்  இந்தியர் கால்பந்து சங்கமும் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கமும் நேற்று முன்தினம் வழியனுப்பி வைத்தன.

பெட்டாலிங் மாவட்ட கால்பந்துச் சங்கத் தலைவர் பத்துமலை, உதவித் தலைவர் கென்னத் கண்ணா, சிலாங்கூர் கால்பந்துச் சங்கத்தின் உதவித் தலைவர் டத்தோ சீகுமாரன், தொழிலதிபர் டத்தோஸ்ரீ ரவின், சிலாங்கூர் இந்தியர் கால்பந்து சங்கத் தலைவர் பச்சையப்பன், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பாண்டியன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிலாங்கூர் மாநில அணிதான் வாகைசூடியது. அதேபோல் இவ்வாண்டு போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தைச் ஙே்ர்ந்த அணிதான் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதற்காக ஆண், பெண் என இருபாலர் அணிகளும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version